MARC காட்சி

Back
பெருங்கற்கால மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள்
000 : nam a22 7a 4500
008 : 181113b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a பெருங்கற்கால மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் |b1 : |b2 =
300 : _ _ |a பாறை ஓவியம்
500 : _ _ |a

          நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி தாலுகாவில்  செம்மநாரை எனும் பழங்குடி கிராமம் உள்ளது.  இது கோத்தகிரியிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  இங்கு குரும்பர் எனும் பழங்குடியினரே அதிகம் உள்ளனர்.  இம்மக்கள் பெரும்பாலும் அடர்ந்த சோலை காடுகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்கள் வனம் குறித்து முழுமையான அறிவும், நேசமும் கொண்டவர்கள். மேலும், வேட்டையாடுதல், தேன் எடுத்தல், மூலிகைகள் சேகரித்தல் என்பது பாரம்பரிய தொழில். இன்றைய சூழலில் பலர் அருகேயுள்ள தேயிலை மற்றும் காபிப் பயிர் தோட்டங்களில் வேலை செய்கின்றனர்.  சிலர் பாரம்பரிய விவசாயத்தை தொடர்கின்றனர். இவ்வூரின் மேல் புறத்தில் ‘ ஏர்பெட்டு‘ எனும் பெரிய பாறை ஒன்று வழித்தடத்தில் உள்ளது. இதனருகே,  வழிபாட்டுக்காக தேர்ந்தெடுத்த சில கற்கள் வைத்து வழிபடுகின்றனர்.  இவ்விடத்தில், இறந்தோர்க்கான ஈமச்சடங்குகள் நடைபெறும். இப்பாறைக்கு, அருகே சுமார் 500 அடி தூரத்தில் அடர்ந்த வனத்துக்கு மத்தியில்  குகை போன்ற பாறை ஒதுக்கு ஒன்று உள்ளது. இது சுமார் 10 அடி நீளம் 8 அடி அகலம் மற்றும் 7 அடி உயரத்தில் உள்ளது. இதில் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் தங்குவதற்கு போதுமான இடமாகும். இக் குகைத் தளத்தில் வடக்கு மற்றும் தெற்கு பக்க சுவர்களில் எண்ணற்ற கற்கீரல்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல அரூப வடிவங்களிலேயே உள்ளது. இருப்பினும் மனித உருவங்கள் தனியாகவும், சேர்ந்தும் சில இடங்களில் காணப்படுகின்றன. அது போல மரம் ஒன்று நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது. குறியீட்டு வடிவங்களும் சில இடங்களில் காணமுடிகிறது.

          இங்குள்ள கற்கீறல்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக நிலவினை பாம்பு விழுங்கும் காட்சியை ஒத்த உருவமாகும். இது இரண்டு இடங்களில் செதுக்கப்பட்டுள்ளது. இவை சந்திர, சூரிய கிரகணங்களை காட்டும் விதமாக உள்ளது. இக்காட்சி, மேலும், பண்டைய தமிழ் இலக்கியங்களில் ‘ அரவு சேர் மதி’ என இக் காட்சியை விளக்கியுள்ளனர். பிற்காலங்களில் எழுப்பப்பட்ட கோயில்களில் பரவலாக காணமுடிகின்றது. 

         இக்கற்கீறல்கள் யாவும் ஒரே பாணியில் உள்ளதால் அவையாவும் ஒரு கூட்டத்தினரால் ஒரு காலத்தில் வரையப்பட்டிருக்கலாம். இங்குள்ள கற்கீல்கள் கூரிய கற்கள் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்கு காணப்படும் உருவங்களின் அமைப்பு மற்றும் கருப்பொருட்களை கொண்டு அணுகும் போது அவை பெருங்கற்காலத்துக்கு முந்தைய காலங்களில் உருவாக்கியிருக்கலாம் என தெரியவருகிறது.

 

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
520 : _ _ |a

          தமிழகத்தில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் பல வண்ணங்களால் தீட்டப்பட்டது. வெகு சில இடங்களிலே உருவங்கள் கற்கீறலாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏர்பெட்டில் இருக்கும். கற்கீறல் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கதாகும். இங்குள்ள கற்கீரல்கள், நீலகிரி மலைத் தொடரின் வட மேற்கில் இன்றைய  கேரள எல்லையில் உள்ள புகழ் பெற்ற எடக்கல் கற்கீறல் ஓவியங்களுக்கு இணையான ஒத்த தன்மையில் உள்ளது கவனிக்கத்தக்கதாகும். 

653 : _ _ |a நீலகிரி, ஓவியங்கள், கோத்தகிரி, பெருங்கற்காலம், தமிழ்நாடு, கற்கீரல்கள், பாறை ஓவியங்கள், குரும்பர்கள், பழங்குடி, கற்கீறல்கள்
700 : _ _ |a க.த.காந்திராஜன்
752 : _ _ |a ஏர்பெட்டு |b # |c ஏர்பெட்டு - செம்மநாரை |d நீலகிரி |f கோத்தகிரி
914 : _ _ |a 11.41482911
915 : _ _ |a 76.86670303
995 : _ _ |a TVA_PNT_00008
barcode : TVA_PNT_00008
book category : பாறை ஓவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00008_ஏற்பெட்டு_குகையின்-உட்புறம்-0001.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_கற்கீறல்கள்-0002.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_மனித-உருவம்-0003.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_மனித-உருவங்கள்-0004.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_மரம்-0005.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_தேள்-வடிவம்-0006.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_செவ்வக-கட்டங்கள்-0007.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_மனித-உருவங்கள்-0008.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_வேட்டைக்-கருவி-0009.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_இனந்தெரியாத-வரைவுகள்-0010.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_மனித-உருவங்கள்-0012.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_கிரகண-வரைவுகள்-0013.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_அலங்கார-வளைவுகள்-0015.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_எழுத்து-வரைவுகள்-0016.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_கோயில்-0017.jpg

TVA_PNT_00008_ஏற்பெட்டு_குறும்பர்-வீடு-0018.jpg